'காதலியின் பெயரில் டீக்கடை' ஜோடிக்கு ரூ.10, சிங்கிளாக வந்தால் 5..வேதனையை வித்தியாசமாக காட்டிய இளைஞர்
ராஜ்கர்: உயிருக்கு உயிராய் காதலித்த காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்து காதலை முறித்துகொண்டு சென்றதால் காதலியின் முதல் எழுத்தில் டீக்கடைக்கு பெயர் வைத்த மத்திய பிரதேச இளைஞர், ஜோடியாக வந்தால் ரூ.10 எனவும் காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு தனி ஆஃபர் கொடுத்து தனது வேதனையை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
உயிருக்கு உயிராய் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றால் தாடி வைத்துக்கொண்டு சோகப்பாடல்களை பாடுவது.. எல்லாம் 80, 90 கிட்ஸ்களோடு முடிந்து விட்டது போல..
இப்போது உள்ள 2 கே கிட்ஸ்களில் பெரும்பாலானோர் காதலில் தோற்றால் அதிகபட்சமாக வாட்ஸ் அப்பில் சோகமாக இரண்டு ஸ்டேடஸ் வைத்து விட்டு சர்வ சாதாரணமாக அடுத்து வேற வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஏமாற்றிவிட்டு சென்ற காதலி
இன்னும், சிலரோ வித்தியாசமாக யோசித்து அதையும் கூட தங்களுக்கு பாசிட்டிவ் ஆக ஆரம்பித்து விடுகின்றனர். எல்லை மீறி செல்லாத வகையில் இதுவும் வரவேற்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதேபோலத்தான் ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது. உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணம் செய்ய மறுத்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டு சென்றதால் சோகம் அடைந்த இளைஞர் அந்தர் குஜ்ஜர் என்ற இளைஞர், டீக்கடை ஒன்றை வைத்துள்ளார்.

காதலி பெயரில் டீக்கடை
டீக்கடை வைத்ததற்கெல்லாம் இவ்வளவு பெரிய பில்டப்பா என்று யோசிப்பது தெரிகிறது. டீக்கடை வைத்தது எல்லாம் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், அந்த டீக்கடைக்கு அந்தர் குஜ்ஜர் வைத்திருக்கும் பெயர்தான் ஹைலட்.. M Bewafa Chaiwala- என்று டீக்கடைக்கு பெயர் வைத்திருக்கும் குஜ்ஜார் பிரம்மண்டமாக நன்கு தெரியும் படி தனது கடையில் வைத்திருக்கிறார்.

காதலிக்கு பாடம் புகட்டும் வகையில்
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் பகுதியில் இந்த டீக்கடை அமைந்துள்ளது. எம் என்ற முதல் எழுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த முன்னாள் காதலியின் பெயரை வைத்திருப்பதாக அந்தர் குஜ்ஜர் கூறுகிறார். அதோடு, நம்பகத்தன்மை இல்லாதவர்( Bewafa) என்ற பொருள் படும் வகையில் கடைக்கு பெயரை வைத்திருக்கிறார். தனது முன்னாள் காதலிக்கு பாடம் புகட்டும் வகையில் இப்படி பெயரை வைத்திருப்பதாக கூறுகிறார் அந்த மத்திய பிரதேச இளைஞர்.

ஜோடியாக வந்தால் டீ 10 ரூபாய்
பெயர் பலகையில் மட்டும் வித்தியாசம் காட்டவில்லை. டீ - யின் விலையும் வெவ்வேறாக அமைத்து கவனம் பெற்றுள்ளார். ஜோடியாக வந்தால் ஒரு டீயை 10 என விற்கும் அந்தர் குஜ்ஜார், சிங்கிளாக வருபவர்கள் அதாவது காதலால் ஏமாற்றப்பட்டு மனம் உடைந்தவர்களுக்கு ரூ.5 என தனி ஆஃபரில் கொடுக்கிறார். இவரது டீக்கடை குறித்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உயிருக்கு உயிராய் காதலித்தோம்
இது குறித்து டீக்கடையை நடத்தி வரும் அந்தர் குஜ்ஜர் என்பவர் கூறுகையில், "நான் தற்போது பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, எனது உறவினர் திருமணத்தின் போது ஒரு பெண்ணை சந்தித்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் நண்பர்களாகினோம். நாளடைவில் இது காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராய் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வோம் என்று நான் கூறியதை அந்தபெண் ஏற்க மறுத்துவிட்டார்.

தற்கொலைக்கு முயற்சித்தேன்
அதோடு வேறு ஒரு நபருடன் அந்த பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. உனக்கு வேலை இல்லை என்றும் அதனால், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது.. எனக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கும் நபருக்கு அனைத்தும் உள்ளது என்று கூறி என்னை உதாசீனப்படுத்திவிட்டார். இதனால் மனம் உடைந்து போன நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், எனது நண்பர்கள் வழிகாட்டுதலால் இந்த முடிவை மாற்றினேன்.

காதலியை கேலி செய்யும் விதமாக
காதல் முறிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு சொந்தமாக ஒரு டீக்கடை தொடங்கும் எண்ணம் வந்தது. இதனால், டீக்கடை தொடங்கினேன். அதோடு எனது முன்னாள் காதலியை கேலி செய்யும் விதமாக அவளது முதல் எழுத்தையும் டீக்கடைக்கு வைத்தேன்" என்றார். மேலும் எனது முன்னாள் காதலி காதலிக்கும் போது ஏதாவது தொடங்கினால் எனது பெயரை வைக்க வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார் என்றும் அந்தர் குஜ்ஜார் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications