இந்தியாவின் முதல் திருநங்கை மேயர் சட்டீஸ்கரில் தேர்வு - பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்!
ராய்கார்க்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மேயராக தேர்வானார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார்.

தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், ‘மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்கிய ஆசி மற்றும் வாழ்த்துக்களாக கருதுகிறேன். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன் . இந்த தேர்தலுக்காக ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு மக்களின் ஆதரவே காரணம். அவர்களின் ஆசி காரணமாகவே வெற்றி பெற்றேன்' எனத் தெரிவித்துள்ளார்.
8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மது கின்னர் பல்வேறு வேலைகளை செய்தும் ரயில்களில் ஆடிப்பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications