அதிருதே.. ம.பி.யில் 80% பிராமணர்கள் பாஜக பக்கம்.. 87% முஸ்லிம்கள் காங்கிரஸ் பக்கம்.. India-TV CNX
போபால்: மத்திய பிரதேசத்தில் 87% முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் 80% பிராமணர்கள் பாஜகவுக்கும் ஆதரிப்பார்கள் என்கிறது India-TV CNX கருத்து கணிப்பு.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஜாதி, மத அடிப்படையில் கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பாக India-TV CNX வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

பிராமணர் வாக்குகள்: மத்திய பிரதேசத்தில் 80 சதவீத பிராமணர் வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 12 சதவீத பிராமணர் வாக்குகள் மட்டுமே கிடைக்கும். 8 சதவீத பிராமணர் வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடும்.
பனியா வாக்குகள்: 68 சதவீத பனியா வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 14 சதவீதமும் 18 சதவீதம் பேர் இதர கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம்.
ராஜபுத்திரர்: 72 சதவீத ராஜபுத்திர வாக்காளர்கள் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதமும் இதர கட்சிகளுக்கு 16 சதவீதம் ராஜபுத்திரர் வாக்குகளும் கிடைக்குமாம்.
குர்மி: 54 சதவீத குர்மி வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடுமாம். காங்கிரஸ் கட்சிக்கு 41 சதவீதமும் இதர கட்சிகளுக்கு 5 சதவீதமும் வாக்களிக்கலாமாம்.
யாதவ்: 47 சதவீத யாதவ் வாக்காளர்கள் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 35 சதவீதமும் வாக்களிக்கக் கூடுமாம். 18 சதவீத யாதவ் வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கலாமாம்.
ஓபிசி வாக்குகள்: மொத்தமாக 56 சதவீத ஓபிசி வாக்குகள் பாஜகவுக்கும் 32 சதவீத ஓபிசி வாக்குகள் காங்கிரஸுக்கும் கிடைக்குமாம். 12 சதவீதம் ஓபிசி வாக்காளர்கள் இதர கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடுமாம்.
கிரார் தாகத்: 84 சதவீத கிரார்-தாகத் வாக்காளர்கள் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் வாக்களிப்பராம். பீல் வாக்காளர்களில் 54 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் 35 சதவீதம் பேர் பாஜகவையும் ஆதரிப்பராம்.
ஜாதவ்- சத்னாமி: ஜாதவ்-சத்னாமி வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் பாஜக;
காங்கிரஸ் கட்சிக்கு 42 சதவீதம் பேர் ஆதரவளிப்பராம்.
தலித்துகள்: தலித்துகளில் 44 சதவீதம் பேர் பாஜகவுக்கும் 40 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கக் கூடுமாம். 16 சதவீத தலித் வாக்காளர்கள் மற்ற கட்சிகளின் பக்கம் நிற்கக் கூடுமாம்.
முஸ்லிம் வாக்குகள்: மத்திய பிரதேசத்தில் 87 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாம். பாஜகவுக்கு வெறும் 2 சதவீத முஸ்லிம் வாக்குகள் மட்டுமே கிடைக்குமாம். 11 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் மற்ற கட்சிகளை ஆதரிக்கக் கூடுமாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications