பாஜக சிவராஜ் சிங் சவுகான் முதல் காங். தலைகள் வரை..ம.பி. தேர்தலில் "வெட்டு குத்து" களேபர 18 தொகுதிகள்
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், மாஜி முதல்வர், மாஜி அமைச்சர்கள் களம் காணுகின்றனர்.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத 18 தொகுதிகள் நிலவரம்:

1. புத்னி:
2006ல் இருந்து தொடர்ந்து நான்கு முறை இந்த தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சுபாஷ் யாதவின் மகனும், ம.பி. காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான அருண் யாதவை 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சிவராஜ் சிங் சவுகான்.
2. சிந்த்வாரா
மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான முன்னாள் முதல்வர் கமல்நாத் தொகுதி இது. 2018-ம் ஆண்டு காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்ற பின்னர் முதல்வராக கமல்நாத் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சிந்த்வாரா இடைத்தேர்தலில் போட்டியிட்ட கமல்நாத் சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.
3. திமானி
ம.பி.யின் மொரோனா பிராந்தியத்தில் இத்தொகுதி இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இங்கே களமிறங்கி உள்ளார்.
2018 இல் காங்கிரஸின் கிரிராஜ் தண்டோடியா 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது. ஆனால் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் இணைந்து தண்டோடியா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக பக்கம் தாவினார். இதனால் 2019-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸின் பிடோசா வென்ற தொகுதி இது. அதாவது காங்கிரஸ் செல்வாக்குள்ள தொகுதி என்கின்றன தேர்தல் ரெக்கார்டுகள்.
4. நரசிங்பூர்
மத்திய பிரதேச மாநில ஓபிசி சமூகங்களின் முகமாக அறியப்படும் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இங்கே பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரகலாத் சிங் படேல் முதல் முறையாக இங்கு களம் காண்கிறார். இதே தொகுதியில் பிரகலாத் சிங் படேல் சகோதர ஜலம் சுமார் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது பாஜகவுக்கு சாதகமான தொகுதியாகும்.
5. நிவாஸ்
ம.பி. பாஜக பழங்குடி மக்கள் முகமும் மத்திய அமைச்சருமான பக்கன் சிங் குலாஸ்தே வேட்பாளராக களம் காணுகிறார். தற்போது மாண்ட்லா லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார் பக்கன் சிங் குலாஸ்தே. இவரது சகோதரர் ராம்பியாரே, 2008 - 2013-ல் இத்தொகுதியில் 2 முறை வென்றார், ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் மார்சோகலிடம் தோற்றார் ராம்பியாரே. இது பாஜகவுக்கு சவாலான தொகுதியாக இருக்கக் கூடும்
6. இந்தூர்-1
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருக்கும் கைலாஷ் விஜயவர்கியா இந்தூர்-1 தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற சீனியர் பாஜக தலைவர். இந்தூர்-2 தொகுதியில் இருந்து 4 முறை; மோ தொகுதியில் இருந்து 2 முறை வென்றவர் கைலாஷ் விஜயவர்கியா. 1990-ம் ஆண்டு முதல் தாம் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் மகுடம் சூட்டியவர். ஆனால் இந்தூர்-1 தொகுதியில் 2018-ல் காங்கிரஸின் சுக்லா 8,000 வாக்குகள் வென்றார். அதனால் இந்த முறை விஜயவர்கியாவுக்கு இந்தூர்-1 தொகுதி டப் ஃபைட் தரும் தொகுதியாக இருக்கலாம்.
7. டாடியா
நரோட்டம் மிஸ்ரா.. பாஜகவின் சர்ச்சைக்கு பெயர் போன முகம். மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர். இத்தொகுதியில் இம்முறை களம் கண்டாலும் வாழ்வா? சாவாதான் என்கிற நிலை. ஏனெனில் 2108-ம் ஆண்டு
காங்கிரசின் பார்தி ராஜேந்திராவை எதிர்த்து வெறும் 2,656 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றா நரோட்டம் மிஸ்ரா.
8. லஹர்
காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத்/ மூத்த தலைவர் திக்விஜய்சிங்குக்கு மிக நெருக்கமானவர்- மபி எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் இங்கு போட்டியிடுகிறார். 2018-ல் 7-வது முறையாக லஹரில் வென்றார் கோவிந்த் சிங். பாஜக வேட்பாளரை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இது காங்கிரஸுக்கு சாதகமான தொகுதியாக சொல்லப்படுகிறது.
9. சித்தி
ம.பி. பிராமணர்களின் முகமாக அறியப்படுபவர் கேதார்நாத் சுக்லா. விந்தியாச்சல் பிராந்திய பாஜக மூத்த தலைவர். 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஆனால் இம்முறை சுக்லாவுக்கு சீட் தரப்படவில்லை. அவருக்கு பதில் லோக்சபா எம்பி ரிதி பதக் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். சுக்லாவின் ஆதரவாளர் ஒருவர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பாஜகவுக்கு பெரும் சிக்கலை கொடுத்தது. இதனால் சுக்லாவுக்கு சீட் தரப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் சுக்லா, போட்டி வேட்பாளராக பாஜகவுக்கு எதிராக களமிறங்கினாலும் ஆச்சரியமில்லை. இதனால் இந்த தொகுதியை பாஜக பறிகொடுக்கும்.
10. ஷிவ்புரி
பாஜகவின் குவாலியர் மகாராணிகளில் ஒருவரான ம.பி. அமைச்சர் யசோதர ராஜே சிந்தியாவின் கோட்டை. ராஜஸ்தான் மாஜி முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவின் சகோதரி. மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தை. இம்முறை ஷிவ்புரியில் தாம் போட்டியிடவில்லை என யசோதர ராஜே சிந்தியா அறிவித்துவிட்டார். அனேகமாக ஜோதிராதித்யா சிந்தியா இங்கு களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு சாதகமான தொகுதி இது.
11. ரகோகர்
முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குடும்பம் அரசாண்ட குணா மாவட்டத்தில் வருகிறது இத்தொகுதி. திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் 2018-ல் 46,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977ல் தனது தந்தை முதன்முதலில் வெற்றி பெற்ற இத்தொகுதியை மீண்டும் பெறுவதில் ஜெயவர்தன் முனைப்புடன் இருக்கிறார். இது காங்கிரஸுக்கு சாதகமான தொகுதி.
12. ராவ்
முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மாநில செயல் தலைவருமானஜிது பட்வாரி 2013-ல் இல் முதல் முறையாக வென்ற தொகுதி. 2018-ல் 5,700 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை தக்க வைத்தார். இம்முறையும் கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
13. ஜபுவா
5 முறை லோக்சபா எம்பியாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா, 2019 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 27,800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பாஜகவை வீழ்த்தினார். இது பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி.
14. சாச்சௌரா
திக்விஜய் சிங்கின் தம்பியான லட்சுமண் பாஜகவில் இருந்து விலகி 2013-ல் காங்கிரஸில் சேர்ந்தார். 2018-ல் பாஜகவின் மம்தா மீனாவை 9,700 வாக்குகள் வித்தியாசத்தில் லட்சுமண் தோற்கடித்தார். மீனா தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இது காங்கிரஸுக்கு சாதகமான தொகுதி.
15. சத்னா
4 முறை எம்பியான கணேஷ் சிங் இம்முறை பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தார்த் சுக்லால் குஷ்வாஹா 2003-ல் இருந்து வாகை சூடும் தொகுதி. இந்த முறை பாஜக அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக பாஜகவின் ரட்நாகர் சதுர்வேதி போட்டி வேட்பாளராக களமிறங்க போவதாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் வெல்லுவது உறுதி என நம்பப்படுகிற தொகுதி.
16. குவாலியர்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளரன அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் களமிறங்கும் தொகுதி. 2018-ல் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். பின்னர் சிந்தியாவுடன் சேர்ந்து பாஜகவுக்கு தாவினார். இதனால் எம்.எல்.ஏ .பதவியை ராஜினாமா செய்தார். 2019 இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனால் பாஜகவுக்கு இது மிகவும் சாதகமான தொகுதி.
17. ஹர்சுத்
மத்தியப் பிரதேச வனத்துறை அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான குன்வர் விஜய் ஷா செல்வாக்குள்ள தொகுதி. 2018 சட்டசபை தேர்தலில் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
18. சான்வெர்
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த துளசிராம் சிலாவத், ஜோதிராதித்யாவுடன் இணைந்து காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குத் தாவிய 22 எம்எல்ஏக்களில் ஒருவர். 2020 இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக சிலாவத் மீண்டும் வென்றார். இதனால் இத்தொகுதி பாஜகவுக்கு சாதகமானது.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?











Click it and Unblock the Notifications