மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: துருப்பு சீட்டாக இருக்கும் தலித் சமூக வாக்குகள்! பாஜக - காங். வியூகம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர். எனவே, தலித் சமூக ஓட்டுக்களை கவர பாஜகவும் காங்கிரசும் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக கூடுதல் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களையும், அனல் பறக்கும் பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளது. இதனிடையே, மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கவர பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மாயக் கவிஞர் சந்த் ரவிதாஸ்க்கு கோவில் கட்டும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தலித் மக்கள் மத்தியில், துறவி ரவிதாஸ்க்கு பெருமளவு ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால், அவர்களின் வாக்குகளை கவரும் விதமாகவும் பாஜக கோவில் கட்ட நடவடிக்கை எடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூட , தலித் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாஜக செய்து வரும் நடவடிக்கைகளை போல எந்த ஒரு கட்சியும் இதுவரை எடுத்தது இல்லை' என்று பேசினார். ஆனால், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய சில நாட்களில், குரு ரவிதாஸ் ஆஷ்ரமத்தின் தலைவர், மருத்துவமனையாக இதை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதேவேளையில் பிரதமரின் நிகழ்ச்சியில் பூஜை செய்ய கூட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சாகர் மாவட்டத்தில் துறவி ரவிதாஸ் நினைவாக மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பாக தலித் வாக்குகளை கவர பாஜக முயற்சிப்பபதாகவும் விமர்சித்தது.
இவ்வாறாக இரு கட்சிகள் இடையேயும் மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கணிசமாக பெற கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில், 82 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். இவற்றில் 47 தொகுதிகள் எஸ்.டி பிரிவினருக்கும் 35 தொகுதிகள் எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர்.
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நிலையில் புந்தேல்கண்ட், விந்தியா மற்றும் குவாலியர் - சம்பல் பகுதிகளில் தலித்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 2003, 2008 ,2013 தலித் வாக்குகள் கணிசமாக பாஜகவிற்கே வந்தது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டி சரிசமமாக இருந்தது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications