ம.பி.: 144 வேட்பாளர்கள் அறிவிப்பு- சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் கூண்டோடு ராஜினாமா- காங்கிரஸ் ஷாக்!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தங்களுக்கு சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் சிலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இம்மாநில தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சியும் களம் காண்கின்றன.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறுகின்றன. ஆளும் பாஜக பெரும் தோல்வியை எதிர்கொள்ளக் கூடும் என்கின்றன இந்த கருத்து கணிப்புகள்.
இத்தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. 144 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் பட்டியல் குறித்த சுவாரசிய அம்சங்கள்:
*காங்கிரஸின் 96 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 69 பேர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
*114 வேட்பாளர்களில் 39 பேர் புதுமுகங்கள்
*2018, 2020 இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 36 பேர் மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்கபட்டுள்ளனர்.
*114 வேட்பாளர்களில் 19 பேர் பெண்கள்
114 வேட்பாளர்களில் 30 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஓபிசி மகா பஞ்சாயத் தலைவர் சாகப் சிங் குஜ்ஜாரும் ஒருவர். குவாலியர் ரூரல் தொகுதியில் சாகப் சிங் குஜ்ஜார் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநில மொத்த மக்கள் தொகையில் 40% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்.
*முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மகன், ஜெய்வர்தன் சிங்; முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா மகன் விக்ராந்த் பூரியோ, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 'வாரிசு'களில் முக்கியமானவர்கள். திக்விஜய்சிங் தம்பி லஷ்மணனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
*பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய அவதேஷ் நாயக், பைஜ்நாத் யாதவ் ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ம.பி: தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி.. பாஜக படுதோல்வி முகம்: Poll Tracker பரபர சர்வே
சீனியர்கள் கூண்டோடு ராஜினாமா: காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர்கள் பட்டியல் கட்சிக்குள் பிரளயத்தையும் உருவாக்கி இருக்கிறது. யத்வேந்திரா சிங், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் சிங் யாதவ், கஜேந்திர சிங், ஷர்தா காதிக் மற்றும் விவேக் யாதவ் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாததால் காங்கிரஸில் இருந்து விலகுவதாக கூண்டோடு அறிவித்துள்ளனர். ஓபிசி வேட்பாளர்களை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டதாக இவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள்: ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பியூஷ் பாபேலே, மூத்த தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து நவராத்திரி நாளில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 144 வேட்பாளர்களுமே உரிய சர்வே அடிப்படையிலும் மேலிடம் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒப்புதலுடனுமே அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications