மாதவிடாய் விடுப்பு.. பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மாணவிகள் மகிழ்ச்சி! எங்கே தெரியுமா?
போபால்: கேரளாவை தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளித்து ஒரு பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாதவிடாய் குறித்து விஷயங்களை பொதுவெளியில் பேசுவது, விவாதிப்பது என்பது இந்தியாவில் இன்னும் கூட சகஜமான ஒன்றாக மாறவில்லை. இதனால் மாதவிடாய் என்ற சொல்லை கூட பயன்படுத்த பலரும் யோசிக்கின்றனர்.

மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணி செய்யும் இடங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் தற்போது அனைத்து கல்லூரி, பல்கலைகழக்கங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. கேரள அரசின் இந்த அறிவிப்பு கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் பல மாநிலங்களும் இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் மாணவிகள் மற்றும் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க அனைத்து மாநில அரசுகளையும் விதிமுறை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மசாஸ்த்ரா தேசிய சட்ட பல்கலைக்கழகம் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவிகள், மாணவ சட்ட சங்கம் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கைகைள் வைக்கப்பட்டு வந்த நிலையில் பல்கலைக்கழகம் தற்போது அதனை ஏற்றுள்ளது.
இதுபற்றி துணைவேந்தர் (பொறுப்பு) சைலேஷ் என் ஹாட்லி கூறுகையில், ‛‛இந்த செமஸ்டர் முதல் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரிலும் கலாச்சார மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதன் ஒருபகுதியாக மாதவிடாய் விடுப்பும் வழங்கப்படுகிறது'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications