ம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. சவுகான் வீட்டுக்கு சென்ற சிந்தியா.. அரை மணி நேரம் முக்கிய ஆலோசனை!
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக, ஆட்சியை தக்கவைக்கும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகானை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்பட்டி பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 3 மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
பாஜக வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, "முழுமையான முடிவுகள் வரும் வரை நாங்கள் காத்திருப்போம். நாங்கள் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நலத்திட்டங்களும் தான் இத்தகைய வெற்றிக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போபாலில் உள்ள முதல்வர் சவுகானின் இல்லத்திற்கு வந்தார். இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் நெருங்கிய சந்திப்பு நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications