சிறுவனை கொன்று ரத்தம் குடித்த நபர்.. மூளையை விழுங்க முயன்ற கொடூரன்.. கேட்கும்போதே நடுங்குதே
போபால்: சகோதரியை பார்க்க சென்ற 16 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொன்ற நபர் அவரது ரத்தத்தை குடித்து, மூளையை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. மனைவியை கொன்று சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்த அந்த கொடூரன் குறித்த திடுக்கிட வைக்கம் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் சமீபகாலமாக கொடூரமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணை அவரது காதலன் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசுவது, காட்டுக்குள் வீசுவது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இதற்கிடையே தான் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. உடன் பிறந்த சகோதரியை பார்த்து சகோதரத்துவ பண்டிகையை கொண்டாடபோன சிறுவனை, ஒருவர் கொன்று ரத்தம் குடித்து, மூளையை உண்ண முயன்ற அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

சகோதரத்துவ பண்டிகை
வடமாநிலங்களில் 'ஹோலி பாய் தூஜ்' என்ற சகோதரத்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சகோதரிகள், தங்களின் சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுப்பார். அதன்பிறகு சகோதரிகளுக்கு அவர்களின் அண்ணன், தம்பிகள் பரிசுகள் வழங்குவார்கள்.
16 வயது சிறுவன்
அந்தவகையில் இந்த ஆண்டு 'ஹோலி பாய் தூஜ்' பண்டிகை கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் சாமனா கிராமத்தில் உள்ள சகோதரியை சந்திக்க 16 வயது நிரம்பிய பரத் விஸ்வகர்மா என்ற சிறுவன் சென்று கொண்டிருந்தார்.
தலையில் அடித்து...
அப்போது பரத்துக்கு பின்னால் ஒருவர் வந்தார். அவரது பெயர் குட்டா படேல். திடீரென்று குட்டா படேல் தனது கையில் இருந்த சுத்தியலை எடுத்து பரத்தின் தலையில் அடித்தார். இதில் பரத் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத கட்டா படேல், சிறுவன் பரத்தை விடாமல் தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
ரத்தம் குடித்து.. மூளையை உண்ண
இந்த சமயத்தில் குட்டா படேல் அங்கிருந்து செல்லவில்லை. இறந்த சிறுவனின் தலையில் இருந்து கொட்டிய ரத்தத்தை குடித்தோடு, மூளையை எடுத்து வாயில் வைத்தார். இதற்கிடையே அங்கு வந்தவர்கள் குட்டாவின் செயலை பார்த்து அதிர்ந்து போயினர். அவர்கள் சத்தம் எழுப்பியதால் பயந்துபோன குட்டா படேல் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து ஓடினார்.
மடக்கி பிடித்த மக்கள்
இதையடுத்து அவரை விரட்டி சென்ற கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். போலீசாரிடம் குட்டா படேல் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். குட்டா படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கொன்றவர்...
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குட்டா படேல் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்ட்டு வெளியே வந்த குட்டா படேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தையே நடுங்க வைத்துள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்டசிறுவனுக்கும், கொலை செய்த நபருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை.சிறுவன் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுவனை கொன்ற பிறகு ரத்தத்தை குடித்து மூளையை வாயில் வைத்து திங்க முயன்றதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications