ம.பி. கோவில் கூட்ட நெரிசல்- பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு: 21 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்
தாதியா: மத்திய பிரதேசத்தில் கோவிலுக்கு செல்லும் வழியில் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாதியா மாவட்டத்தின் எஸ்.பி. உள்பட 4 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் மாதா கோவிலில் நவராத்திரியின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியின் மீதுள்ள பாலத்தை கடந்து வர வேண்டும்.

பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கையில் பாலம் இடிந்து விழப் போகிறது என்ற வதந்தி பரவியது. இதையடுத்து மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முந்தியடித்து ஓடியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர், 100 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே தாதியா மாவட்ட மாஜிஸ்திரேட், எஸ்.பி. உள்பட 21 அதிகாரிகளை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications