ம.பி. கோவில் கூட்ட நெரிசல்: குழந்தைகளை உயிருடன் ஆற்றில் வீசிய போலீசார்

மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாதியாவைச் சேர்ந்த போலீஸ் கிராம் ரக்ஷா சமிதி உறுப்பினரான ராஜுஸ்ரீ யாதவ் கூறுகையில்,
போலீசார் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும், உயிருடன் இருக்கும் குழந்தைகளையும் தூக்கி ஆற்றில் வீசுவதாக பக்தர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து ஆற்றில் இருந்து 1 குழந்தையை மீட்டேன். மேலும் 5 குழந்தைகளை மீட்டேன். 5 குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். 2 வயது குழந்தை மட்டும் என்னிடம் உள்ளது. அதன் பெற்றோர் யார் என்று தெரியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், இது உண்மை என்று தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி நந்தன் குமார் துபே தெரிவித்தார்.
ராஜுஸ்ரீயின் உறவினர் கமல் கிஷோர் பிரஜபதி(21) கூறுகையில், ஆற்றில் மூழ்கவிருந்த சிறுவனை நாங்கள் காப்பாற்றி அவனின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தோம். அவனை யார் ஆற்றில் வீசியது என்று தெரியவில்லை என்றார்.
தாங்கள் யாரையும் ஆற்றில் வீசவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஆற்றில் பல கிலோமீட்டர் தூரம் வரை பிணங்கள் மிதந்தன.
தாதியாவைச் சேர்ந்த இன்டெல் அஹ்ரிவார்(32) கூறுகையில், காக்கி உடை அணிந்த ராட்சசர்கள் அவர்கள். போலீசார் குழந்தைகளை தூக்கி ஆற்றில் வீசியதை பார்த்தேன். மேலும் அவர்கள் 3 டிரக்குகள் நிறைய உடல்களை ஏற்றி எங்கோ எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் 175 உடல்கள் கிடந்ததை நான் பார்த்தேன். இதை நீதிமன்றத்தில் வந்து கூறவும் தயார் என்றார்.
நெரிசலில் சிக்கி பலியான 5 வயது தம்பியின் உடலை வாங்கச் சென்றபோது போலீசார் தன்னை பாலத்தில் இருந்து தள்ளிவிட்டதாக ஆசிஷ் அஹிர்வார்(15) என்பவர் தெரிவித்தார்.
எனது மச்சானின் உடலை தேடிக் கொண்டிருந்தபோது போலீசார் 24 பக்தர்களை ஆற்றுக்குள் வீசினர். அதில் சிலர் உயிருடன் இருந்தனர் என்று கீதா மிஷ்ரா(55) என்பவர் தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications