அல்-கொய்தாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரசா ஆசிரியரை கைது செய்த டெல்லி போலீஸ்
டெல்லி: அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பெங்களூரை சேர்ந்த மதரசா ஆசிரியரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த மதரசா பள்ளியின் ஆசிரியர் மவுலானா அன்சார் ஷா என்பவர் நேற்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரவாதிகளை தேடி பிடித்து வரும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரின் மற்றொரு ஆபரேசனாக இது கூறப்படுகிறது.
மவுலானா அன்சார் ஷாவை பெங்களூரில் நேற்று கைது செய்த போலீசார், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தியபிறகு, டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.
மவுலானாவுக்கு ஜனவரி 20ம் தேதிவரை போலீஸ் காவல் வழங்கியுள்ளது கோர்ட். இந்திய துணைக் கண்டத்தில், அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிக்கும் நோக்குடன் செயல்படும் கூட்டத்தோடு, மவுலானாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
அல்-கொய்தா இயக்கத்தினரை மவுலானா சந்தித்து உள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கிடைத்த தகவலை கொண்டு மவுலானா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications