ரூ.640 கோடி நஷ்ட ஈடு வழக்கு: நெஸ்ட்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ்
டெல்லி: ரூ.640 கோடி நஷ்ட ஈடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நெஸ்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கவும் நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.

அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்தது.
இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்பிரிவை (Section 12-1-D) முதல் முறையாக நெஸ்லே நிறுவனம் மீது பயன்படுத்தி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் (NCDRC) வழக்கு தொடர்ந்துள்ளது மத்திய அரசு. ரூ.640 கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க கோரி நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மும்பை உயர்நீதிமன்றம், கடந்த 13ம் தேதி சில நிபந்தனைகளுடன் நீக்கிய நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications