மகதாயி நதி பிரச்சினை: கர்நாடகாவில் நாளை பந்த்.. பஸ், ஆட்டோ ஓடாது.. பள்ளிகளுக்கு லீவு!
பெங்களூர்: மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் நாளை, சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகள், திரைப்படச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தில், வட கர்நாடகத்தின் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மகதாயி நதியில் இருந்து 7.56 டிஎம்சி தண்ணீரை கலசா-பண்டூரி கால்வாய் வழியாக எடுத்துக்கொள்ள அனுமதி கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கர்நாடகத்தின் மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையடுத்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் கன்னட திரைப்படச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜூலை 30ம் தேதியான சனிக்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது கன்னட அமைப்புகள் கோரிக்கையாக உள்ளது.
கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, மகதாயி நதி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை இதை வலியுறுத்தி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
பந்த்துக்கு அரசே மறைமுக ஆதரவு அளிப்பதாக கூறப்படுவதால், நாளை கர்நாடக அரசு பஸ்கள் இயங்காது என்று தெரிகிறது. திரைப்பட துறையினர் காலை 10.30 மணிக்கு டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திர பூங்கா பகுதிக்கு கண்டன ஊர்வலம் நடத்த உள்ளனர்.
பந்திற்கு, உணவக சங்கம், நகைக்கடை சங்கம் உள்ளிட்ட 1500 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே நாளை பெங்களூரில் பஸ், ஆட்டோ ஓடாது என்று தெரிகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த தேர்வுகள், திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications