மகாராஷ்டிராவில் யாருடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாம்.. 'தெளிவான' குழப்பத்தில் பாஜக
மும்பை: ஹரியானாவில் சிக்கல் இல்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு குழப்பம் அதிகரித்துள்ளது. இங்கு தனிப்பெரும் கட்சியாக வந்து விட்டபோதிலும் கூட யாருடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்பதில் அது குழம்பிப் போயுள்ளது.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. அதன்படி, இரு மாநிலங்களிலும் பாஜக இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஹரியானாவில் தனித்து ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர், கட்சி மேலிட பார்வையாளராக மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஹரியானாவில் வெங்கையா நாயுடுவும் நியமிக்கப் பட்டனர். இவர்கள் தலைமையிலான குழு கூடி அவ்விரு மாநில முதல்வர்களைத் தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், நிபந்தனையின்றி, வெளியிலிருந்து பாஜகவுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேசமயம், சிவசேனாவும் ஆதரவு தர முன்வரும் என்றே கூறப்படுகிறது. ஆனால் தங்களிடம் கோரினால்தான் ஆதரவு தருவோம் என்று சிவசேனா காத்திருக்கிறது.
இவர்களில் யாருடைய ஆதரவை நாடுவது என்பதில் பாஜக குழப்பம் அடைந்துள்ளதாம்.
அதேநேரத்தில், ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, கட்சியின் துணைத்தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
அக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை சமர்ப்பிக்கப்போவதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications