மகாராஷ்டிராவில் எம்.எல்.சி. தேர்தலை உடனே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கடிதம்
மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலை உடனே நடத்த வேன்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் 6 மாதங்களுக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக பதவியேற்க வேண்டும்.

கடந்த மார்ச் 24-ந் தேதியன்று எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மே 27-ந் தேதிக்கு முன்னதாக உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக வேண்டும்; இல்லையெனில் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அமைச்சரவையுடன் பதவி ஏற்க வேண்டும் என்கிற அரசியல் சாசன நெருக்கடி உருவாகும்.
இதனால் ஆளுநரின் நியமன எம்.எல்.சி.யாக உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சரவை 2 முறை பரிந்துரையை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் கோஷ்யாரி எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனையடுத்து பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே, எம்.எல்.சி. தேர்தல் நடத்தாதாலும் ஆளுநர் நியமன அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாலும் இருக்கும் சிக்கலை விவரித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில்தான், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கோஷ்யாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், லாக்டவுன் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தலாம். தற்போதைய நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டசபையிலும் மேலவையிலும் உறுப்பினராக இல்லை. அவர் மே 27-ந் தேதிக்கு முன்னதாக மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் எம்.எல்.சி. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications