நேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்
பூஜ்: பாகிஸ்தான் காதலியை சந்திப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் டூ வீலரில் பயணம் செய்து எல்லையை கடக்க முயன்ற நிலையில் சிக்கியிருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த 20 வயது இளைஞர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சித்திக் முகமது ஜிஷான். ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நண்பராகி இருக்கிறார்.

காதலியை சந்திக்க முடிவு
இருவருக்கும் இடையேயான நட்பு காதலாகி சமூக வலைதளங்களால் வலுவடைந்திருக்கிறது. இந்த நிலையில் இதுவரை நேரில் பார்த்திராத காதலியை எப்படியாவது சந்திக்க நாடு விட்டு நாடு, எல்லை தாண்டிப் போவது என முடிவு செய்கிறார் சித்திக்.

குஜராத் பாதையில்..
இதற்கான பயணத்தையும் திட்டமிட்டுக் கொண்டு டூ வீலரில் குஜராத் நோக்கி செல்கிறார். குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ரான் ஆப் கட்ச் எனும் சதுப்பு நில பிரதேசம் உள்ளது. இந்த பிரமாண்டமான சதுப்பு நிலத்தின் மறுமுனையில்தான் பாகிஸ்தான் உள்ளது. ரான் ஆப் கட்ச் பகுதியில் ராணுவத்தினரின் கண்ணில் படாமல் பாகிஸ்தானுக்குள் நுழைவது சித்திக்கின் திட்டம்.

சதுப்பு நிலத்தில்
இதற்காக கட்ச் பிராந்தியத்தின் தோலவீரா வரை டூவிலரில் சென்றிருக்கிறார். அங்கிருந்து நடைபயணமாகத்தான் ரான் ஆப் கட்சை கடக்க வேண்டும். எல்லையில் ராணுவ வீரர்களுக்காக மட்டும் ரான் ஆப் கட்ச் நடுவே மண் பாதை அமைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வாழாத சூனிய பிரதேசம் இந்த ரான் ஆப் கட்ச். சதுப்பு நில விலங்குகள்தான் இங்கே நடமாடும். இப்படி ஒரு அபாயகரமான பகுதி.

எல்லையில் மயங்கிய சித்திக்
ஆனாலும் காதல் கண்ணை மறைத்தது... ரான் ஆப் கட்ச்சை எப்படியும் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து காதலியை சந்திக்க வேண்டும் என்கிற லட்சிய தாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத சதுப்பு நில பெருவெளியை உயிரை கையில் பிடித்தபடி கடந்து சென்ற சித்திக்கின் கண்களில் தென்பட்டு எல்லையோர வேலிகள்... உள்ளத்தில் உற்சாகம் பிறந்தாலும் உடல் சோர்ந்து தளர்ந்து போய் மண்ணில் சரிந்து வீழ்கிறார் சாதிக்.
Recommended Video

சித்திக்கின் காதல் காவியம்
தங்களைத் தவிர வேறு யாரும் நடமாடாத மண்ணில் ஒரு இளைஞர் மயங்கி கிடப்பதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு முதலுதவி செய்து விசாரித்தனர். அப்போதுதான் ஒரு காதல் காவியம் படைக்க சித்திக் பயணப்பட்டது தெரியவந்தது. இதனிடையே சித்திக்கின் செல்போன் சிக்னலை வைத்து தோலவீரவில் அவரது பைக் இருப்பதை கண்டுபிடித்தது குஜராத் போலீஸ். பின்னர் என்ன உரிய விசாரணைகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சித்திக்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications