உடைய போகும் அடுத்த பர்னிச்சர்.. 17 சிவசேனா எம்எல்ஏக்களை குறிவைக்கும் பாஜக.. இப்படி ஒரு திட்டமா!?
மகாராஷ்டிராவில் ஆட்சியை நிரூபிக்க வேண்டும் என்பதால் சிவசேனா எம்எல்ஏக்களை பாஜகவை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது.
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை நிரூபிக்க வேண்டும் என்பதால் சிவசேனா எம்எல்ஏக்களை பாஜகவை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். நேற்று அதிகாலை இந்த அதிரடி திருப்பம் நடந்தது.
சரத் பவரின் அண்ணன் மகனான இவர் பாஜக உடன் கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார். பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் என்ன
ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எத்தனை எம்எல்ஏக்கள் அஜித் பவார் - பாஜக கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள் என்று இன்னும் உறுதியாக தகவல் வெளியாகவில்லை. தங்கள் பக்கம் 20+ எம்எல்ஏக்கள் இருப்பதாக அஜித் பவார் கூறி வருகிறார். ஆனால் 40+ எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சரத் பவார் தெரிவித்து இருக்கிறார்.

பாஜக சிக்கல்
இதனால் பாஜக கட்சி எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் வென்றது.

என்ன செய்யும்
பாஜகவிற்கு ஆட்சி அமைக்க இன்னும் 42 இடங்கள் தேவை. இதனால் தற்போது சிவசேனா எம்எல்ஏக்களை பாஜகவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறது. ஏற்கனவே 4 நாட்களுக்கு முன் சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வந்தது.

எத்தனை பேர்
சிவசேனாவின் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணி தாவலாம் என்று செய்திகள் வந்தது. ஆனால் இதை சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக மறுத்து வந்தார். தற்போது அப்படி நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அஜித் பவார்
அஜித் பவாரை மட்டும் நம்பி இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் பாஜக சிவசேனா மீதும் கவனம் திட்டமிட்டுள்ளது. அக்கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏக்களை பாஜக குறி வைத்து வருகிறது . இதனால் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் இருக்கும் ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications