For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து இந்துமகா சபை அட்டூழியம்- மத்திய அரசு அதிரடி உத்தரவால் நீக்கம்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மகாத்மா காந்தியடிகளை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல் அமைத்திருந்தது இந்து மகாசபை. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் மகாத்மா காந்தியடிகளை அவமதிக்கும் உருவம் அகற்றப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுப் படுகொலை செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம் இது. அதுவும் நாட்டின் தேசப் பிதாவையே படுகொலை செய்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் முதன் முதலாக தடை செய்யப்பட்டது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா! மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா!

கோட்சே எனும் மகாத்மாவாம்

கோட்சே எனும் மகாத்மாவாம்

இன்றளவும் மகாத்மா காந்தியை விமர்சிப்பது இந்துத்துவா இயக்கங்களின் கொள்கையாக உள்ளது. காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்வதும் தொடருகிறது. மகாத்மா காந்தியடிகளை பொம்மை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது போன்ற காட்சிகளை இந்துமகா சபை ஆதரவாளர்கள் வெளியிட்டும் வருகின்றனர்.

நவராத்திரி பந்தல்

நவராத்திரி பந்தல்

இதன் உச்சமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகா சபையினர் அமைத்த நவராத்திரி பந்தல் சர்ச்சையாகி உள்ளது. நவராத்திரி பூஜை கொண்டாட்டங்கள், மேற்கு வங்க மாநிலத்தின் கலாசார அடையாளம். அதுவும் நவராத்திரி பந்தல்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நவராத்திரி பந்தல்களில் ஒன்றை இந்துமகாசபை அமைத்திருந்தது.

மகிஷாசுரனாக காந்தியார்

மகிஷாசுரனாக காந்தியார்

இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியை எருமைத் தலை கொண்ட மகிஷாசுரன் போல இந்து மகாசபை சித்தரித்திருந்தனர். இது தொடர்பான பட்ங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது.

 மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதில் தலையிட்டது. கொல்கத்தாவில் நவராத்திரி பந்தலில் மகாத்மா காந்தியை விமர்சித்து வைக்கப்பட்டிருந்த மகிஷாசுரன் உருவம், அகற்றப்பட்டது. இருந்த போதும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்து மகாசபையினர், மகாத்மா காந்தி மீதான எங்கள் விமர்சனங்கள் சரிதான். அதனால்தான் அப்படி செய்திருந்தோம். ஆனால் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் அதை அகற்றினோம் என்கின்றனர். இந்து மகாசபையின் இந்த அட்டூழியத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

English summary
A new controversy has erupted over Mahatma Gandhi as Mahishasura at Hindu Mahasabha’s Navratri pandal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X