'மகாத்மா காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதினார்' - ராஜ்நாத் சிங்
மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய வலதுசாரிகளால் 'வீர் சாவர்க்கர்' என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு விழா செவ்வாயன்று டெல்லியில் நடந்தது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பேசிய ராஜ்நாத் சிங் சாவர்க்கர் ஓர் உறுதியான தேசியவாதி என்றும் இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் முதல் ராணுவ உத்தியாளர் என்றும் தெரிவித்தார்.
மார்க்சிய மற்றும் லெனினிய சித்தாந்தங்களைப் பின்பற்றுவோர் சாவர்க்கரை ஃபாசிஸ்ட் என்று தவறாகக் குற்றம் சாட்டுவதாகவும் ராஜ்நாத்சிங் விமர்சித்தார்.
"இந்திய வரலாற்றில் சாவர்க்கர் ஒரு முக்கியமான சின்னம் அவர் அப்படிப்பட்டவராகவே தொடர்வார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் அவரை தாழ்ந்து நோக்குவது முறையானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல. அவர் சுதந்திரத்திற்காக போராடியவர்," என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- காந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள்
சாவர்க்கர் விடுதலை போராட்டத்திற்காக போராடியது குறித்து குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவருக்கு பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு முறை ஆயுள் சிறை தண்டனை விதித்து என்றார்.
'காந்திதான் மன்னிப்புக் கடிதம் எழுதச் சொன்னார்'
"சாவர்க்கர் குறித்து தொடர்ச்சியாக பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலமுறை மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாத்மா காந்திதான் அவரை மன்னிப்புக் கடிதங்கள் எழுத சொன்னார்," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
- சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா?
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக மிகவும் விரிவான கோட்பாடுகளை இந்தியாவுக்கு தந்தவர் சாவர்க்கர் என்றும் ராஜ்நாத் சிங் பேசினார்.
சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கை குறித்து பேசியவர், 'இந்து' எனும் சொல் எந்த மதத்துடனும் தொடர்புடையதாக இல்லை; புவியியல் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கை கலாசார தேசிய வாதத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்றும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
இந்துத்துவ கொள்கை மற்றும் இந்திய சமூகத்தில் ஒற்றுமை ஆகியவை குறித்து பலர் பேசினார்கள். ஆனால் சாவர்க்கர்தான் அதை உரக்கப் பேசினார். அவ்வாறே அவை குறித்து பிறரும் உரக்கப் பேசியிருந்தால் தேசப்பிரிவினை நடந்திருக்காது என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றுகிறதுஎன்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
வீர் சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள் எத்தனை?
விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
ஆனால் வரலாற்றுத் தகவல்களின்படி சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.
தம் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும் அவரது மன்னிப்புக் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார்.
1911இல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார்.
1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் அவை எழுதப்பட்டன. ஒரு மன்னிப்பு கடிதம் அவரது மனைவியால் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்டது.
1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர்.
ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
- சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை - பெண் மீட்பு
- நீருக்கடியில் 'அவசரக் கலவி' புகைப்படத்துக்கு உயரிய விருது
- ராம் மனோகர் லோஹியாவுக்கு காந்தி பிறப்பித்த கட்டளை - எதிர்வினை எப்படி இருந்தது?
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்















Click it and Unblock the Notifications