காஷ்மீரில் மேஜர் மாற்றம்.. தேர்தல் அறிவிப்பு இருக்கட்டும்.. சைலண்டாக வந்த உத்தரவு! எழுந்த விமர்சனம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அங்கு பல்வேறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கே பணியாற்றி வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டன.

தேர்தல்: அதேநேரம், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் செப். 30க்குள் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இப்போது வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
பணியிட மாற்றம்: இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு அங்கே பல்வேறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கே பணியாற்றி வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த 88 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கேஏஎஸ் எனப்படும் காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), ரேஞ்ச் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், எஸ்எஸ்பி என்று போலீஸ் துறையில் பணியாற்றும் 33 அதிகாரிகளும் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் அறிவிப்புக்குச் சற்று நேரத்திற்கு முன்பு இந்த இடமாற்றங்கள் எல்லாம் நடந்தது. சம்பா துணை கமிஷனராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சர்மா, இடமாற்றம் செய்யப்பட்டு ரஜோரி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் நெருக்கடி- 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல்!
தற்போது ஜம்மு பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குநராக இருக்கும் விகாஸ் குண்டல், பூஞ்ச் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இன்னும் சில அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
விமர்சனம்: அதேநேரம் இந்த இடமாற்ற உத்தரவுகள் நடுநிலையானது இல்லை என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு தலைவர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது ட்விட்டரில், "சுதந்திர தினத்தன்று அதிகாரிகளை அழைத்து பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதில் பக்கச்சார்பு இருக்கலாம்... தேர்தல் ஆணையம் இந்த இடமாற்ற உத்தரவை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்" என்றார்.
உத்தரவு: கடந்தாண்டு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. லோக்சபா தேர்தல் உடனேயே காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மே மாதம் காஷ்மீரில் லோக்சபா தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications