மும்பை பரேல் பகுதியில் கிறிஸ்டல் டவர் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. 4 பேர் பலி
மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரின் 12 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video

மும்பை: மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரின் 12 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை பரேல் பகுதியில் ஹின்ட்மதா திரையரங்கம் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் குடியிருப்பிற்குள் சிக்கியவர்களை பெரும் சிரமப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கிரேன் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் படுகாயங்களுடன் 20 பேர் அருகில் உள்ள கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அடுக்குமாடிக் குடியிருப்பின் 12 ஆவது மாடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், தீவிபத்து ஏற்பட்ட கட்டடம் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி கட்டடத்திற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் ஆகியவை துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி இதே பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கமலா மில்ஸ் பப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications