லீக் ஆன வீடியோ.. ஏடாகூடமாக மாட்டிக்கொண்ட டிஎஸ்பி.. சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம்.. உ.பி யோகி அதிரடி
டிஎஸ்பி ஒருவரை சப் இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் யோகி
கான்பூர்: ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற டிஎஸ்பி-யை சப் இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்தியாவிலேயே அதிக அளவு பாலியல் கொடுமைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.. பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதனால், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை அவர்களுக்கு உரிய உயிர் மற்றும் வாழ்வதற்கான எந்தவித பாதுகாப்பும் கிடைப்பதில்லை..

அக்கிரமம்
பாலியல் அக்கிரமங்களால் ஏராளமான தலித் பெண்களின் உயிர்களும் பறிபோய் கொண்டிருக்கின்றன.. இந்த தொடர் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தாலும், தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் உபியில் எடுக்கப்படாமலேயே உள்ளது. அந்தவகையில், சமீபகராம்பூர் மாவட்டத்தில் ஒரு கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது.. ராம்பூர் மாவட்டத்தில் அந்த பலாத்கார சம்பவம் நடந்தது.. அதுவும் ஒரு பெண் போலீஸை பலாத்காரம் செய்துள்ளனர்..

ஆஸ்பத்திரி மேனேஜர்
காவல் உதவி ஆய்வாளர் ராம்வீர் யாதவ், மருத்துவமனை மேனேஜர் வினோத் யாதவ் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் நடந்தபோது, ராம்பூரில் துணைக் கண்காணிப்பாளராக கிஷோர் ஷர்மா பொறுப்பில் இருந்தார்... ஆனால், பலாத்காரம் செய்தது, ராம்வீர் யாதவ் என்ற போலீஸ்காரரும், ஆஸ்பத்திரி மேனேஜரும் என்று தெரிந்தும்கூட, அவர்கள் மீது டிஎஸ்பி கிஷோர் ஷர்மா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அதற்கு பதிலாக, இப்படி ஒரு கேஸையே மூடி மறைக்க உதவியுள்ளார்..

அப்பட்ட வீடியோ
இதற்காக அவர்கள் 2 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து, பெண்ணை சீரழித்த ராம்வீர் யாதவ், வினோத் யாதவ் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அம்மாநில அரசும் உத்தரவிட்டது... இறுதியில், ரூ.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றதும் உறுதியானது.. எனவே, கடந்த வருடம் டிசம்பர் மாதம் டிஎஸ்பி கிஷோர் ஷர்மா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்..

டிஸ்மிஸ்
எனினும், விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டேயிருந்தது.. காரணம், கிஷோர் ஷர்மா ஏகப்பட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது, இந்த லஞ்ச கேஸை விசாரிக்கும்போதுதான் தெரியவந்தது.. ராம்பூர் மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக கிஷோர் ஷர்மா இருந்தபோது, ஏராளமான வழக்குகளில் இப்படித்தான் லஞ்சம் வாங்கி, அந்த கேஸ்களை எல்லாம் மூடி மறைத்தாராம்.. இந்தநிலையில்தான், சப் இன்ஸ்பெக்டராக, அவரை பதவி இறக்கம் செய்து முதல்வர் ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவி்ட்டுள்ளார்..

கான்ஸ்டபிள்
இனிமேல் கிஷோர் ஷர்மா மறுபடியும் அந்த போஸ்டிங்கிற்கு உயர்வதற்கு 10 முதல் 12 வருஷங்கள் ஆகுமாம்.. அதேபோல, காவல் உதவி ஆய்வாளராக இருந்த, ராம்வீர் யாதவ் இப்போது போலீஸ் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த தகவல்களை எல்லாம் உத்தரப்பிரதேச அரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.. உபி மாநில முதல்வர் யோகியின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications