மத்திய நிதித்துறை செயலர் அரவிந்த் மாயாராம் மாற்றம்! புதிய செயலராக ராஜிவ் மெக்ஹ்ரிஷி நியமனம்!!
டெல்லி: மத்திய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளரான அரவிந்த் மாயாராம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய செயலாளராக ராஜிவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் அமைச்சகங்களின் செயலாளர்கள் மாற்றப்படாமல் இருந்தனர். கடந்த வாரம் முதல் அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் இதுவரை 20க்கும் மேற்பட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் நேற்று நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் மாற்றப்பட்டுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக அரவிந்த் மாயாராம் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் மாயாராம் ராஜஸ்தான் மாநில ஐ.ஏ.எஸ். கேடர்.
அவருக்குப் பதிலாக மற்றொரு ராஜஸ்தான் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜிவ் மெஹ்ரிஷி, புதிய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமைச்சக செயலாளர்கள் உட்பட பல அதிகாரிகள் நேற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications