"மேட் இன் சீனா" யு.எஸ்.பி.யில் கொடுக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" பிரவுச்சர்
டெல்லி: மோடி அரசின் "மேக் இன் இந்தியா" பிரசாரம் குறித்த மின்னணு பிரவுச்சரை சீனாவில் தயாரிக்கப்பட்ட "மேட் இன் சீனா" யு.எஸ்.பி மூலம் விநியோகித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனைத்து பொருட்களையும் இந்தியாவிலே தயாரிக்க வேண்டும்; இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேக் இன் இந்தியா என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த தொடக்க விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து கலந்து கொண்ட அனைவரும் அறிந்து கொள்வதற்காக யு.எஸ்.பி. டிரைவில் பிரவுச்சர் இணைத்து தரப்பட்டது.

மேட் இன் சீனா யு.எஸ்.பி.
ஆனால் அந்த யு.எஸ்.பி. டிரைவில் "மேட் இன் சீனா" என்று போடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சீனாவில் இருந்து 65% பொருட்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் 65% எலக்ட்ரானிக் பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

எலக்ட்ரானிக் தயாரிப்பை கைவிட்ட இந்தியா
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பே எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பை கைவிட்டுவிட்டது இந்தியா. அப்போது சீனா, ஜப்பான், கொரியா, தைவான் ஆகியவை இந்த துறையில் கொடி கட்டிப் பறந்ததால் இந்திய தொழில்துறை இதனை கைவிட்டுவிட்டது.

120 மில்லியன் டாலர் இறக்குமதி
தற்போது 38.46 மில்லியன் டாலர் மதிப்பிலான யு.எஸ்.பி. டிரைவ்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒட்டுமொத்தமாக 120 மில்லியன் டாலர் மதிப்புக்கு யு.எஸ்.பி. டிரைவ்கள் இறக்குமதி செய்துள்ளோம்.

39 மில்லியன் டாலர் ஏற்றுமதி
அதே நேரத்தில் 39 மில்லியன் டாலர் மதிப்பிலான யு.எஸ்.பி. டிரைவ்களை நாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறோம். இது குறிப்பாக பிரான்ஸ் நாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications