அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது விஹெச்பியின் லட்சியம்: பிரவீன் தொகாடியா
மும்பை: என்ன விலை கொடுத்தாவது, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதுதான் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்று அவ்வமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பக்வத் வந்திருந்தார். அவர் கூறுகையில் "ஹிந்துஸ்தான் என்பது இந்துக்களின் தேசம். நமது நாட்டின் அடையாளம் ஹிந்துத்துவா.

இந்துத்துவா என்பது, பிற மதங்களையும் தன் மதத்தைப்போல் நினைத்து இணைத்துக்கொள்ளும் வாழ்வியல் வழிமுறை. ஜாதி பேதமற்று சமத்துவமாக இந்துக்கள் வாழ வழி செய்வதே அடுத்த ஐந்தாண்டுகளில் விசுவ ஹிந்து பரிஷத் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும். இந்த பணியில் ஆர்எஸ்எஸ்சும் தன்னை இணைத்துக்கொள்ளும். இந்துக்கள் அனைவரும் பாகுபாடு இன்றி, ஒரே இடத்தில் நீர் அருந்த வேண்டும், ஒரே இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும். ஜாதிக்கொரு சுடுகாடு இருக்க கூடாது. இந்துக்களில் அவர்கள் யாராக இருந்தாலும் இறந்த பிறகு ஒரே சுடுகாட்டில்தான் தகனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவிடம் அயோத்தி ராமர் கோயில் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்குமாறு நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் "அயோத்தியில் என்ன விலை கொடுத்தாவது பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவது விஹெச்பியின் குறிக்கோள். ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்வரை எங்களது நோக்கம் இதுவாகத்தான் இருக்கும்.
அமைதி ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையீத், மொசூத் அசார் ஆகிய தீவிரவாதிகளை இந்தியாவிடம், பாகிஸ்தான் ஒப்படைக்கும்வரை அந்த நாடு அமைதியை விரும்புவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications