அமலாக்கப் பிரிவின் தீவிர நடவடிக்கைகளைத் தடுக்கவே சொத்துகளை விற்ற விஜய்மல்லையா
டெல்லி: தமக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி தடுக்கவே சொத்துகளை யாருக்கும் தெரியாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா விற்பனை செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் ரூ 9,000 கோடி கடனைப் பெற்று விட்டு அதை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் விஜய் மல்லையா. இதனால் அவரது ரூ1,411 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அப்போதுதான் கொடகு பகுதியில் உள்ள 2 சொத்துகளை யாருக்கும் தெரியாமல் விஜய் மல்லையா விற்பனை செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. சொத்துகளை முடக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில்தான் விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்திருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
இந்த சொத்துகளை விற்பனை செய்தது மூலம் கிடைத்த பணம் மல்லையாவுக்கு சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என நீதிமன்றம் பிரகடனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மல்லையா மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
இந்தியாவில் இருந்த போதே நீதிமன்றங்கள் அனுப்பிய சம்மன்களை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார் மல்லையா. பின்னர் இங்கிலாந்துக்கு தப்பிய அவர் தற்போது சொத்துகளை முடக்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால் இந்த வழக்கு தற்போது வலுவானதாக மாறியுள்ளது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இங்கிலாந்து அரசோ இதற்கு ஒத்துழைக்காமல் மறுத்து வருகிறது. இருதரப்பு சட்டரீதியான உதவி செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்மல்லையா இந்தியா கொண்டுவரப்பட்டால் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டுவிடும் என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications