மோடி நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டார்: மமதா குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 50 நாட்களை எட்டியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தி்த்த மமதா கூறுகையில், சஹாரா நிறுவன மோசடியில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு கூட தொடர்பு உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தூங்கிகொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ரூ.50,000 கோடி பிரில் குழு நிதி நிறுவன மோசடியில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது. பணத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும் என நான் நம்புகிறேன். ஆனால் மக்களின் இயல்பு நிலை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?
கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று உறுதி மொழி கூறிய பிரதமர் மோடி அதனை மீட்காதது ஏன்? கறுப்புபணம் ஒழிப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பிரதமர் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டார் என மமதா குற்றம்சாட்டினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications