பெண் ஆளும் மாநிலத்தில் பாலியல் குற்றங்களா... அவமானம்: மம்தாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம் மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயர்சாதி வாலிபரை காதலித்ததற்காக, அந்த ஊர் பஞ்சாயத்தாரின் தீர்ப்பின் படி 13 பேர் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நடந்த கொடுமைகள் குறித்து போலீசாரிடம் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த டிசம்பரில் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். அதனைத் தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்ததற்காக மீண்டும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். இதில் அப்பெண் கடந்த டிசம்பர் 31ந்தேதி பலியானார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பெண்கள் கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டதாக புகார் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ப்ரதீப் பட்டாச்சாரியா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு பெண் முதல்வராக உள்ள நிலையிலும்இது போன்று பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது. தன்னை முதல்வர் என மமதா பானர்ஜி கூறி கொள்கிறார். இது நாம் அவமானப்பட வேண்டிய விவகாரம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்களில் மாநில அரசு முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications