மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது.

அதேநேரம் தற்போது மாநிலத்தில் உள்ள அதிருப்தி வாக்குகளின் உதவியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது,
கடந்த சில மாதங்களுக்கு முன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி, உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.
மேலும், தனது நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பான்ர்ஜியால் போட்டியிட முடியுமா என்றும் சுவேந்து அதிகாரி சவால் விடுத்திருந்தார், இந்த சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று நூற்றுக்கணக்கான மக்களுடன் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு பேரணியாக வந்த மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழந்த சுவேந்து அதிகாரியை எதிர்த்து தீவிர பிரசாரத்தை வரும் காலங்களில் மம்தா பானர்ஜி மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications