சந்தேஷ்காலியை விடுங்க.. மணிப்பூர், ஹத்ராஸ் நினைவிருக்கா? பிரதமருக்கு மமதா பானர்ஜி நறுக் கேள்வி
கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மமதா பானர்ஜி பெண்களுடன் இன்று பேரணியை நடத்தியுள்ளார். பேரணியில் பிரதமருக்கு எதிராக சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் ரேஷன் பொருட்களை கடத்துவது, நிலங்களை அபகரிப்பது என தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருந்ததாகவும், இதற்கெல்லாம் உச்சமாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேஷ்காலி பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்திலும் இறங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் நிர்வாகிகள், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பரிந்துரைத்தனர்.
மறுபுறம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஷாஜகான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த முயன்றபோது, அவரது ஆதரவாளர்களால் அடித்து விரட்டப்பட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு, பழங்குடி பெண்களின் தொடர் போராட்டம் என அடுத்தடுத்த நெருக்கடிகள் காரணமாக, ஷாஜகானை கட்சியிலிருந்து நீக்கியது திரணாமுல் காங்கிரஸ் தலைமை.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.
இவரது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மமதா பானர்ஜி பெண்களுடன் இன்று பேரணியை நடத்தியுள்ளார். பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, "மேற்கு வங்கத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக கூறியிருந்தது. நான் உறுதியாக சொல்கிறேன், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் மேற்கு வங்கம்தான்.
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து அழைத்து சென்றார்களே அப்போது பாஜகவும், பிரதமரும் எங்கு இருந்தார்கள்? உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது உடலை வலுக்கட்டாயமாக எரித்தபோது பாஜகவினர் எங்கிருந்தீர்கள்? பில்கிஸ் பானுவை மறந்துவிட்டீர்களா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
வழக்கமாக சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதித்தான் பெண்களுடன் மமதா பானர்ஜி பேரணி நடத்துவது வழக்கம். ஆனால், சந்தேஷ்காலி விவகாரம் விவாதங்களை கிளப்பியதையடுத்து 7ம் தேதியான இன்று பேரணியை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications