மோடி அலை தாக்கி மமதாவுக்கு புத்தி பேதலித்துவிட்டது: பாஜக கடும் தாக்கு
டெல்லி: நாடு முழுவதும் வீசி வரும் மோடி அலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று பாரதிய ஜனதா கடுமையாக தாக்கியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை குறிவைத்து கடந்த சில நாட்களாக பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இதற்கு மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதன் உச்சமாக, மோடி ஒரு பிசாசு.. மேற்கு வங்கத்தை ரத்தக் கடலாக மாற்ற முயற்சிக்கிறார் என்றெல்லாம் தாக்கியிருந்தார், இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில பொறுப்பாளரான சித்தார்த்நாத்சிங் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் வீசி வரும் மோடி அலை மமதா பானர்ஜியைத் தாக்கியிருக்கிறது. அதனால் அவர் தமது மனநிலையை இழந்தவராக புத்தி பேதலித்து பேசி வருகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் எந்த ஒருவளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. மமதாவுக்கு இப்போது செல்வாக்கு இல்லை. இதனால்தான் மமதா மதவாத அஜெண்டாவை செயல்படுத்த முனைகிறார். மமதா பானர்ஜி இப்போது தவறான ஒரு மரத்தை பார்த்து குரைத்துக் கொண்டிருக்கிறார்.
மோடியை குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். அரசியல் சாசன அமைப்பு நிறுவனங்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் படிப்பறிவற்ற மனிதர்களிடம் இருந்துதான் வரும்.
இவ்வாறு சித்தார்நாத்சிங் கூறினார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications