பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மம்தா பானர்ஜி... புகழ்ந்து தள்ளிய பாஜக தலைவரால் சலசலப்பு
கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் பேசியதாவது: மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.

அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியும் என்றால், மம்தா பானர்ஜி தான் முதலிடத்தில் இருப்பார். மம்தா பானர்ஜியின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது.
ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். ஆகவே, இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான தருணம்'' என்றார்.
மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் பேசி உள்ள கருத்து அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications