முஸ்லிம் மதகுருக்கள் எதிர்ப்பு- பெண்கள் கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்திய திரிணாமுல் நிர்வாகிகள்!
மால்டா: மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மதகுருக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் மார்ச் 14-ந் தேதியன்று பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளும் அர்ஜூனா விருது பெற்றவர்களும் பங்கேற்க இருந்தனர்.

கால்பந்து போட்டிகளில் பெண்களையும் பங்கேற்க செய்யும் வகையில் மால்டாவின் உள்ளூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முஸ்லிம் மவுலவிகளும் உள்ளூர் கிராம மக்களும் ஒன்றாக திரண்டு வந்து போட்டியை நிறுத்துங்கள்.. இது பெண்களிடத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் போட்டியாளர்களோ, பெண்கள் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்வதால் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இத்தனைக்கும் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தவரும் கூட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரெசா என்பவர்தான்.. இருப்பினும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசாரும் முஸ்லிம் மதகுருக்களுக்கு ஆதரவாக நின்று கால்பந்து போட்டியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகமும் இப்போட்டியை வேறுவழியின்றி நிறுத்துமாறு உத்தரவிட்டது. பெண்கள் கால்பந்து போட்டியை இப்படி திரிணாமுல் காங்கிரசார் தடுத்து நிறுத்தியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications