வாய் விட்ட மோடி.. பின்னாடியே "மீன் குழம்புடன்" வந்த மம்தா.. மூக்கை துளைக்கும் பாஜகவின் உணவு அரசியல்
பாட்னா: பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளறி விட்டுள்ளது.. இதற்கு பல்வேறு தலைவர்கள் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது நவராத்திரி விரத நாட்களில் பொரித்த மீன் சாப்பிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "இந்துக்கள் விரதம் இருக்கும் மாதத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இறைச்சி உணவை சாப்பிட்டு அதை வீடியோக வெளியிட்டார்... நவராத்திரி விரத நாட்களில் தேஜஸ்வி பொரித்த மீன் சாப்பிட்டார்.. இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நோக்கில் தேஜஸ்வி செயல்படுகிறார்" என்று பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உணவு பழக்கவழக்கம்: பிரதமரின் இந்த பேச்சுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்திருந்தார்.. அதில், "வெவ்வேறு சமூகங்கள் மற்றும் இந்துக்களில் பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியான சடங்குகளும், உணவுப்பழக்கங்கள் இருக்கின்றன.. அப்படியிருக்கும்போது, இதை திணிக்க பாஜக யார்? ஒருவரின் உணவு பழக்கவழக்கங்கள் மீது ஆணையிடும் பாஜகவுக்கு, இந்தியா மீதும் அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களை பற்றியும் கொஞ்சம்கூட அக்கறை இல்லையே.
தோக்லா போன்ற சைவ உணவுகள், மீன் குழம்பு போன்ற அசைவ உணவுகள் இரண்டுமே எனக்கு பிடிக்கும். சின்ன வயசிலிருந்தே நான் சமைத்து வருகிறேன்... நிறைய பேர் என்னுடைய சமையலை பாராட்டியிருக்கிறார்கள்..
சமையல்: பிரதமர் விரும்பினால் அவருக்கும் சமைக்க தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் சமைக்கும் உணவை அவர் சாப்பிடுவாரா என்பது தெரியவில்லை.. மோடி என் உணவை ஏற்றுக்கொள்வாரா? அவர் என்னை நம்புவாரா? அவர் விரும்புவதை நான் சமைப்பேன்.. அவருக்கு எது பிடிக்குமோ, எதுவானாலும் நான் சமைத்துத் தருகிறேன்.
இதனை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜி கூறும்போது, "பிரதமர் மோடி விரும்பினால் நான் அவருக்கு சமைத்துக் கொடுக்க தயார். ஆனால், மோடிஜி எனது உணவை ஏற்பாரா? எனக்கு தோக்ளாவும் பிடிக்கும் மீன் குழம்பும் பிடிக்கும்" என்று கூறியிருந்தார்.
பாஜக எதிர்ப்பு: மம்தாவின் இந்த பேச்சுதான் மேற்கு வங்க அரசியலில், பெரும் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது. பாஜகவுக்கு முதல்நபராக எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது பாஜக.
பாஜக தலைவர் சங்குதேப் பாண்டா மம்தாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.. "மோடி சைவ உணவு உண்பவர் என்பது நன்றாக தெரிந்த மம்தா பானர்ஜி, வேண்டுமென்றே அவரை இப்படி வம்புக்கு இழுக்கிறார்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
பன்றி இறைச்சி: மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் ததாகதா ராய் இதை பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "மோடிக்கு மீன் சோறு சமைத்துத் தர மம்தா பானர்ஜி ஆசைப்படுகிறார். ஆனால், அதற்கு முன்பாக அவர் ஏன் பன்றி இறைச்சி வறுவலை, தங்களது கட்சியின் மூத்த தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு ஏன் இதுவரை சமைத்து தரவில்லை? இதன் மூலம் சமயசார்பின்மையை உறுதிபடுத்திவிடலாமே? தானம் வீட்டிலிருந்து தொடங்குகிறது என்றும் காட்டிவிடலாமே? இறைச்சி உணவை கொண்டாடியதாகவும் இருக்குமே" என்று கிண்டலடித்துள்ளார்.
அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் பட்டாச்சாரியா இதுகுறித்து சொல்லும்போது, "சகோதர-சகோதரி என்ற முறையில் மம்தா அக்கா நிச்சயமாக பிரதமருக்கு உணவு சமைக்க முன்வரலாம்... பகைமை உணர்வை குறைப்பதற்காக, மம்தா இந்த வழியில் முயல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இன்று இந்தியா எதிர்கொண்டு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மம்தா பானர்ஜியும் மோடியும் தான் பொறுப்பு" என்று தாக்கி பேசியிருக்கிறார்.
உண்ணும் உரிமை: ஆனால், திரிணமூல் காங்கிரஸ் எம்பி டோலா சென் மம்தாவின் பேச்சை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சொல்லும்போது, "தான் விரும்புவதை உண்ணும் உரிமை மோடிக்கு எப்படி இருக்கிறதோ? அதுபோலவே ஒவ்வொரு இந்தியருக்கும் அதே உரிமை உள்ளது என்பதைத்தான் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ஆளுக்கொருபக்கம் தலைவர்களின் கருத்துக்கள், தேர்தல் நேரத்திலும் சோஷியல் மீடியாவில் "கமகமவென வாசனையுடன் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications