பாலமுரளி கிருஷ்ணா மறைவு: மம்தா பானர்ஜி, ராகுல், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு திரையுலகினர் தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்னர்.
டெல்லி: பிரபல இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இந்நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியா உண்மையான இசை ஜாம்பவானை இழந்துள்ளது. மூத்த கர்நாடக இசை கலைஞரின் இசை என்றென்றும் நீடித்து இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "மாமேதை மங்கலபள்ளி பாலமுரளி கிருஷ்ணா மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சங்கீதம் ஒரு முன்னணி இசைமேதையை இழந்துள்ளது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications