"எங்க மேல கை வைச்சா மொத்த நாடும் அதிரும்".. 2029 ஆட்சி இருக்காது.. பாஜகவுக்கு மம்தா பானர்ஜி வார்னிங்
கொல்கத்தா: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் பாஜக 2026 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தை வீழ்த்த நினைத்தால் மொத்த நாடும் அதிரும். என்று அவர் பாஜகவை கண்டித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஈடுபட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தேர்தல் ஆணையம் மூலம் பாஜக இந்த வேலையை செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எஸ்ஐஆர் பணி
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் - பாஜக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பாக அங்கும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதில் சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பாஜகவுக்கு எதிராகவுள்ள வாக்காளர்களை நீக்கிவிட்டு, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்படி செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.
இதனை கண்டித்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகளிலும் எஸ்ஐஆர் தாக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள். தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தவெக ஆகியோர் எஸ்ஐஆரை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
நாடே அதிரும்
திமுக சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் மேற்குவங்கத்தில் பாஜக வலுவாக உள்ள பர்கனா மாவட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஸ்ஐஆரை கண்டித்து பிரம்மாண்ட பேரணி நடத்தினார்.
அப்போது பேசிய மம்தா, "எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 2029 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். உங்களால் ஆட்சியை தக்க வைக்க முடியாது. அதன் பிறகு எங்கே செல்வீர்கள். எங்கள் மீது குறிவைத்தால் மொத்த நாடே அதிரும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நான் மொத்த நாட்டிற்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன். சராசரியாக 3 வருடங்களில் மேற்கொள்ள வேண்டிய எஸ்ஐஆர் பணிகளை, 2 மாதங்களில் எப்படி செய்ய முடியும்.
குஜராத்தில் வீழ்ச்சி
முழுக்க முழுக்க தவறான தரவுகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல் வெளியானால் அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். மக்கள் முன்பு யார் ஆட்சிக்கு வரவேண்டுமோ அவர்களுக்கு வாக்களித்தனர். தற்போது அரசு யார் வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட எவற்றுக்கும் மதிப்பில்லை.
பாஜக என்ன சொல்கிறதோ அதன்படி தான் அனைத்தும் நடக்கிறது. அவர்கள் மேற்கு வங்கத்தை வீழ்த்த நினைக்கிறார்கள். வங்க மொழியை வீழ்த்த திட்டமிடுகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. என்னை தோற்கடிக்க நினைத்தால் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தோல்வியை சந்திக்கும்." என்றார். அவரின் இந்த கருத்து மேற்கு வங்க அரசியலில் விவாதமாக மாறியுள்ளது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications