பிரதமர் பதவியேற்பு விழா: திரிணாமுல் காங். பங்கேற்பு
கொல்கத்தா: நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க உள்ளது.
டெல்லியில் மே 26-ந் தேதியன்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ராவையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயையும் அனுப்பி வைப்பது என்று அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று முடிவெடித்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு நரேந்திர மோடி அனுப்பிய கடிதம் மாநிலத் தலைமைச் செயலகத்துக்கு வந்து சேர்ந்தது.
பதவியேற்பு விழா நடைபெறும் நாளில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியான கவிஞர் நஸ்ருல் இஸ்லாமின் பிறந்த தின விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர் சார்பில் அமித் மித்ராவும், முகுல் ராயும் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்றார்.
முன்னதாக, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மோடியை மிகக் கடுமையாக மமதா விமர்சித்ததால் மோடி பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications