மீண்டும் எழும் மூன்றாவது அணி.... சந்திரசேகர் ராவ் அழைப்புக்கு மமதா, ஹேமந்த் சோரன் ஆதரவு
தேசிய அரசியலில் மீண்டும் 3-வது அணி முழக்கம் எழுந்துள்ளது.
Recommended Video

டெல்லி: தேசிய அரசியலில் மாநில கட்சிகளிடம் இருந்து மீண்டும் மூன்றாவது அணி முழக்கம் எழுந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என விடுக்கப்பட்ட அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1990களில் காங்கிரஸுக்கு எதிராக தேசிய முன்னணி உதயமானது. திமுக தலைவர் கருணாநிதி, ஆந்திரா முதல்வர் என்.டி. ராமராவ் என முதுபெரும் அரசியல் தலைவர்கள் விபி சிங் தலைமையில் உருவாக்கினர். 1989 தேர்தலில் மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.
காலம் மாற காங்கிரஸ்- பாஜக எனும் இருதுருவ அரசியல் தேசிய அரசியலில் மையம் கொண்டது. இதற்கு மாற்றாக அவ்வப்போது மூன்றாவது அணி முழக்கங்கள் எழுவதும் அடங்கிப் போவதும் தேறாமல் போய்விடுவதும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

திடீரென 3-வது அணி முழக்கம்
அண்மைகாலமாக கிழக்கு கடற்கரையோர மாநில கட்சிகள் கூட்டமைப்பு என்கிற கோஷமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென அழைப்பு விடுத்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

வடகிழக்கு தேர்தல் முடிவுகள்
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்கிற கருத்துகளை வடகிழக்கு மாநில தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில் 3-வது அணி முழக்கம் எழுந்துள்ளது.

மமதா, ஹேமந்த் சோரன் வாழ்த்து
இம்முழக்கத்தைத் தொடர்ந்து சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அதேபோல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரனும் சந்திரசேகர ராவை தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார்.

காங்கிரஸை தனிமைப்படுத்தும் வியூகம்
மஜ்லிஸ் கட்சியின் ஓவைசியும் சந்திரசேகர ராவின் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. காங்கிரஸின் எதிர்காலம் என்பதும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 3-வது அணி முழக்கம் என்பது காங்கிரஸை தனிமைப்படுத்தக் கூடிய வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications