மார்க்சிஸ்ட் கட்சி- திரிணாமுல் கூட்டணி அமைக்க நான் ரெடி: மமதா அதிரடி அறிவிப்பு!!
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பமாக பரம எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி.
பீகாரில் எதிரும் புதிருமாக 20 ஆண்டுகாலம் இருந்து வந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்து அம்மாநில சட்டசபை இடைத்தேர்தலை எதிர்கொண்டனர். தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 6ஐ நிதிஷ்-லாலு கூட்டணி அள்ளியது. பாஜகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைத்தன.
நிதிஷ்-லாலு உருவாக்கிய பார்முலா இப்போது பல மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டு கால இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, இப்போது பாஜகவை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வங்கமொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு மமதா பானர்ஜி அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
- பீகாரில் லாலுஜி, நிதிஷ்ஜி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி அமைந்திருந்தால் அமோக வெற்றி கிடைத்திருக்கும்.
- மேற்கு வங்கத்திலும் அதே போன்ற ஒரு நிலை உருவாவதாக நினைக்கிறேன். அரசியலில் எவரும் தீண்டத்தகாதவர் இல்லை.
- இடதுசாரி கட்சிகளில் ஒன்றான சோசியலிஸ்ட் யுனைட்டி சென்டருடன் கூட நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம்.
- மார்க்சிஸ்ட்- திரிணாமுல் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் முன்வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
- ஜனநாயகத்தில் இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவுகளை நாங்கள் மூடிவிடவில்லை.
- இடதுசாரிகளை நான் ஒருபோதும் வெறுத்தது இல்லை. இடதுசாரிகளில் நல்ல மனிதர்கள் பலரும் இருக்கின்றனர்.
- இடதுசாரி அல்லது வலதுசாரி என்று முத்திரை குத்தப்படுவதைவிட முற்போக்காளர், வளர்ச்சிக்கான மனிதர், மக்களுக்கான மனிதர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.
- 2009ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்தான் வென்றது. தற்போது கூடுதலாக ஒரு இடத்தில் வென்றுள்ளது. அதை வன்முறை மூலம்தான் பாஜக பெற்றது.பாஜகவில் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர் இருந்த போது கூட்டணி அமைத்தோம். ஆனால் இப்போது இருக்கும் புதிய அணி, அரசியலை கெடுத்துதான் வைக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications