"பச்சை பொய்".. அமித்ஷா சொல்வது எல்லாம் அபாண்டம்... பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. போட்டு தாக்கும் மம்தா..!

அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி தக்க பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: "பொய், பொய் மேலே பொய்களாக அடுக்கி கொண்டே போகிறார் அமித்ஷா.. பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. அரசியலுக்காக அவங்க எதையும் செய்யக்கூடியவர்கள்.. அமித்ஷா உள்துறை அமைச்சர் என்பதை மறந்துவிடகூடாது" என்று தன் தலைமையிலான ஆட்சியை விமர்சித்திருந்த அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.. இம்மாநில சட்டசபை தேர்தல், சில மாதங்களில் நடைபெற உள்ளது..

அதனால் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பாஜக இந்த முறை தீவிர பிரசாரத்தை கொஞ்சம் முன்னதாகவே துவக்கி உள்ளது.

பாஜக

பாஜக

இதைதவிர, ஆளும் தரப்பில் இருந்து விக்கெட்களை வீழ்த்தி தங்கள் பக்கம் இழுப்பது, சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி, பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது போன்றவற்றிலும் மும்முரம் காட்டி வருகிறது. முன்னதாக, பாஜக தலைவர் நட்டா மேற்கு வங்கம் பிரச்சாரத்துக்கு சென்று வந்தநிலையில், அவரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான, அமித்ஷா, 2 நாள் பயணமாக, மேற்கு வங்கம் சென்றார்.

அமித்ஷா

அமித்ஷா

இந்த பயணத்தின்போது, ஆளும் கட்சியை சரமாரியாக அமித்ஷா விமர்சித்தும் இருந்தார்... குறிப்பாக, "ஊழல், குற்றங்கள் போன்றவற்றில்தான் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருக்கிறது.. அரசு நடத்துபவர்கள் இதை பற்றியெல்லாம் கவலைப்படறதே கிடையாது.. வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்.. 300க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணைகள் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.. அதனால் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

 வளர்ச்சி

வளர்ச்சி

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அமித்ஷாவுக்கு சரியான பதிலடியை தந்திருக்கிறார்.. அவர் சொல்லும்போது, "மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அமித்ஷா நேற்று சொன்னது எல்லாமே பொய்தாகள்.. அவர் மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.. ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சியில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.

பொய்

பொய்

இப்படி பொய், பொய் மேலே பொய்களாக அடுக்கி கொண்டே போகிறார் அமித்ஷா.. பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. அரசியலுக்காக அவங்க எதையும் செய்யக்கூடியவர்கள்.. அமித்ஷா உள்துறை அமைச்சர் என்பதை மறந்துவிடகூடாது.. ஒரு உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பொய்யும் சொல்லக்கூடாது.. சிஏஏ மூலம் மக்களின் தலைவிதியை பாஜகவினால் ஒருபோதும் தீர்மானிக்கவும் முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+