பெற்ற மகளையே 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காராம் செய்த தந்தை கைது!
டெல்லியில் பெற்ற மகளையே மிரட்டி தந்தை ஒருவர் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மகளையே கொலை செய்துவிடுவதாக மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவரது தாய் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூத்த சகோதரர் அவரது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். தாயும் வீட்டில் இல்லாததால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த தனது தந்தை வாயில் துணியை வைத்து அடைத்து கை கால்களை கட்டிப்போட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் தன்னையும் தனது தாயையும் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி நடப்பதை வெளியே கூறாமல் தவித்து வந்துள்ளார். அதிலிருந்து நாள்தோறும் அவர் தனது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை கூட வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த மாணவி தனது வகுப்பு ஆசிரியையிடம் நடப்பதைக் கூறி கதறியுள்ளார்.
மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த கொடூர தந்தையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே ஜேஜே கேம்ப் என்ற பகுதியில் குடியிருந்த போது அங்கிருந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக அங்கிருந்து விரட்டிவிடப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications