பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பை மீறி.. இரவில் நைசாக முதல்வர் வீட்டிற்குள் புகுந்த நபர்! திடுக் சம்பவம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் செய்த காரியம் பகீர் கிளப்புவதாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சூழலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி வீட்டில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முதல்வர் இல்லம்
தெற்கு கொல்கத்தாவில் டோலியின் நுல்லா எனப்படும் கங்கையின் பழைய கால்வாயை ஒட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ளது. முதல்வரின் வீடு என்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஒருபுறம் கால்வாய் இருக்கும் போதிலும், அதற்கு அந்த பக்கமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். மம்தாவுக்கு z பிரிவு பாதுகாப்பு உள்ளதால், வீட்டிற்கும் கடும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மர்ம நபர்
இருப்பினும், அத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி இளைஞர் ஒருவர் மம்தா வீட்டில் நுழைந்துள்ளார். சனிக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் நுழைந்த அந்த மர்ம நபர், இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் அந்த இளைஞர் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞர் யார், அவரது பெயர், வயது உட்பட எந்தவொரு தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

எப்படி வந்தார்
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், "இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. கால்வாயின் மறுபுறத்தில் கூட 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.. அவர்களை எல்லாம் தாண்டி அந்த நபர் எப்படி உள்ளே வந்தார் எனத் தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவம் பற்றி எங்களால் பேச முடியாது. இந்த விவகாரம் இப்போது உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்படு வருகிறது" என்று கூறினார்.

விசாரணை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு விரைந்தார். இது குறித்து கொல்கத்தா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதல்வர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கொல்கத்தா போலீசார்
கொல்கத்தா போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நபர் எப்படியோ முதல்வர் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர் காளிகாட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். முதலமைச்சர் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதல்வர் இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications