"இது தான் சுதந்திரம்.." விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர்! என்னவாம்
திஸ்பூர்: மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவர் ஒருவர், பாலில் குளித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவும் தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டே குளித்துள்ளார். அந்த நபர் ஏன் இப்படிச் செய்தார்.. இதன் பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் பல்வேறு காரணங்களால் விவாகரத்துகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. கருத்து வேறுபாடு தொடங்கி இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொதுவாகவே விவாகரத்து என்பது சிக்கலான வலி மிகுந்த ஒன்றாகவே இருக்கும். பல நேரங்களில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் அதில் இருந்து மீளச் சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

சுதந்திர நாள்
ஆனால், சிலர் விவாகத்தை எதோ சுதந்திர நாள் அளவுக்குக் கொண்டாடுவார்கள். அவர்கள் அந்தளவுக்குத் திருமண உறவில் கஷ்டப்பட்டு இருப்பார்கள். இதனால் சிலர் விவாகரத்தை ரொம்பவே கொண்டாடுவார்கள். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நமது நாட்டில் நடந்துள்ளது.
பாலில் குளியல்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் அலி என்பவருக்கு விவாகரத்து பெற்ற நாள் ஒரு கொண்டாட்ட நாள். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த "விடுதலை" கிடைத்துவிட்டதாக அவர் கூறுகிறார். விவாகரத்து கிடைத்தபோது அவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இந்த நாளை அவர் அசாதாரணமான முறையில் கொண்டாடத் தீர்மானித்தார். வித்தியாசமான முறையில் என்றால் எப்படி எனக் கேட்கிறீர்களா.. பாலில் குளித்து. ஆம், விவாகத்து பெற்ற நாளை பாலில் குளித்துக் கொண்டாடத் தீர்மானித்து இருக்கிறார் மாணிக் அலி.
என்ன செய்தார்
கீழ் அசாமின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் அலி, தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த உடனே பாலில் ஒரு குளியலைப் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. மாணிக் அலி தனது வீட்டின் வெளியே 4 பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் நிரப்பி வைத்திருக்கிறார். ஒரு ஜக்கில் பாலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு குளிக்கிறார். அப்போது அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இப்படி வினோதமான முறையில் அவர் தனது விவாகரத்தைக் கொண்டாடி இருக்கிறார்.
அவ்வளவு மகிழ்ச்சி
இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் இன்று முதல் சுதந்திரமாக இருக்கிறேன்" என்று சந்தோஷத்தில் கத்துவது தெளிவாகக் கேட்கிறது. இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விவாகத்திற்கு ஏன் இந்த மனுஷன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கணும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இதற்கான பதிலையும் அவரே கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் மேலும் கூறுகையில், "என் மனைவிக்குக் காதலன் என்று ஒருத்தன் இருக்கிறான். அவனுடன் அடிக்கடி ஓடி போய்விடுவாள். அவரை மீட்டு வருவதே எனது வேலையாக இருந்தது. எங்கள் குடும்பத்தின் கவுரவத்திற்காக இத்தனை நாள் அமைதியாக இருந்தேன்" என்றார். அவரது மனைவி ஏற்கனவே இரண்டு முறைக்கு மேல் காதலுடன் சென்றதாகவும் இவரே முதலில் கூட்டி வந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
காரணம்!
அந்தப் பெண் தனது காதலன் உடனேயே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் பரஸ்பரமாகச் சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி நீதிமன்றத்தில் விவாகரத்தும் கோரியுள்ளனர். மாணிக் அலி மேலும் கூறுகையில், "நேற்றுதான் விவாகரத்து இறுதியானதாக எனது வழக்கறிஞர் எனக்குத் தெரிவித்தார். அதனால் இன்று என் சுதந்திரத்தைக் கொண்டாடப் பாலில் குளிக்கிறேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications