வீட்டுப் பாடத்தை சரியாக எழுதாத குழந்தை... வாயில் வெங்காயத்தை திணித்து கொன்ற கொடூர தந்தை !
ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் மனப்பாடப் பகுதியை சரியாக ஒப்பிக்காத 6 வயது மகளின் வாய்க்குள் வெங்காயத்தைத் திணித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குட்டே (30). இவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது 6 வயது குழந்தை பாரதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுப்பாடம் எழுதச் சொல்லி தனது மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த குழந்தை சரியாக எழுதாததால் சஞ்சய்குட்டே ஆத்திரமடைந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து தண்டனை என்ற பெயரில் குழந்தைக்கு வெங்காயத்தை கொடுத்து விழுங்க சொல்லி அடித்துள்ளார் சஞ்சய் குட்டே. அடி தாங்காமல் குழந்தையும் வெங்காயத்தை விழுங்கியுள்ளது. அப்போது திடீரென பாரதி தொண்டைக்குள் வெங்காயம் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சஞ்சய்யின் இந்தக் கொடூர செயலை கண்டு அவரது மனைவியும், 2 வயது மகனும் பயந்துபோய் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் குழந்தை பாரதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் சஞ்சய் குட்டே புதைத்துவிட்டார்.
பின்னர், பயத்தில் இருந்து மீண்ட சஞ்சய்யின் மனைவி தனது உறவினர்களின் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட பாரதியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய் குட்டேயை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications