ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்ததால் கோபம்... புதுமனைவியை அடித்துக் கொன்ற கணவர்
புனே: ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வெளியே சென்றதால், கோபமடைந்த கணவர் புது மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் புனேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே கல்தேக்கடியில் உள்ள மீனாத்தாய் தாக்கரே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் நிஷாத். இவர் கோண்ட்வாவில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவருக்கு பூஜா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை பூஜா, ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து வெளியே சென்றுள்ளார். இது ரஞ்சித்திற்கு பிடிக்கவில்லை. வீடு திரும்பிய பூஜாவை அவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தில் பூஜாவை தாக்கியுள்ளார் ரஞ்சித். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பூஜா உயிரிழந்தார். பயந்து போன ரஞ்சித் போலீசிற்குப் பயந்து வீட்டை வெளிப்பக்கம் பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பூஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்வர்கேட் போலீசார், தலைமறைவாக உள்ள ரஞ்சித்தைத் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications