வறுமையின் கொடுமை... தந்தையே தன் 2 குழந்தைகளை கொன்ற கொடூரம் !
பெங்களூரு: பெங்களூருவில் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத விரக்தியில் தந்தையே இரண்டு குழந்தைகளைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார். இது தொடர்பாக குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ரஹாரா பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சிவக்குமார் (37) தாயம்மா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். பவன்குமார் (9), சின்சேனா (6) ஆகிய இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 மற்றும் 2- ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து குழந்தைகளின் தாயார் தாயம்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் சிவக்குமார் மட்டும் எவ்வித வருத்தமும், கவலையும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு சிவக்குமார் மீது சந்தேகம் எழுந்தது. மேலும் அருகிலுள்ள சாக்கடை கால்வாய்க்கு சிவக்குமார் அடிக்கடி சென்று பார்த்து வந்ததும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உறவினர்கள் மிரட்டி கேட்ட போது, பள்ளி கட்டணத்தை கட்ட முடியாததால் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து சாக்கடையில் வீசியதாக சிவக்குமார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனிடையே அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் நேற்று முன்தினம் சாக்கு பை ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 5 மணி நேரத்திற்கும் மேல் போராடி இரண்டு குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக குழந்தைகளின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பெற்ற குழந்தைகளை வறுமையின் கொடுமையால் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications