கள்ளக் காதலால் நேர்ந்த கொடூரம்... மனைவி, காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், புர்னேஷ் திவார். இவரது மனைவி குஷி (27). அதே பகுதியைச் சேர்ந்த பவன் திவார் என்பவரோடு குஷியாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு இருந்து வந்துள்ளார்.
தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குஷியாக இருப்பதை அறிந்த புர்னேஷ், இந்த தகாத உறவை துண்டிக்கும்படி பலமுறை கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குஷி உல்லாசமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பவனும், குஷியும் நேற்றிரவு தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புர்னேஷ் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் இருவரையும் சரமாரியாக கொலை வெறியுடன் தாக்கியுள்ளார். இதில் மண்டையில் பலத்த காயமடைந்த குஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் பவன் திவாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரும் உயிரும் போகும் வழியிலேயே பிரிந்தது.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் புர்னேஷ் திவாரை தேடிவருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications