உறவுக்கு மறுத்த மனைவியின் தலையை வெட்டி பைக்கில் வைத்து ஊர்வலமாக சென்ற தாத்தா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 65 வயது நபர் தனது மனைவியின் தலையை அறுத்து அதை பைக்கில் வைத்து ஊர்வலமாக சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள ஹவேரியில் இருக்கும் பையாத்கி தாலுகாவைச் சேர்ந்தவர் முகமது ஹனிப் குல்மி(65). தேன் வியாபாரி. அவரது மனைவி ஜாஹிரா பீ(55). அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 4 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஹனிபும், ஜாஹிராவும் தங்களின் இளைய மகன் ஹஜிபுதீன்(35) மற்றும் அவரது மனைவியுடன் வசித்து வருகின்றனர். ஹிஜிபுதீனுக்கு செவ்வாய்க்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹவேரியில் உள்ள மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் மருத்துவமனையில் இருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மனைவியுடன் உறவு கொள்ள முயன்றுள்ளார் ஹனிப். ஆனால் உறவு கொள்ள மறுத்து தூங்கியுள்ளார் ஜாஹிரா. இது தொடர்பாக நேற்று காலை ஹனிப் தனது மனைவியுடன் தகராறு செய்தார்.

அப்போது ஆத்திரம் அடைந்த ஹனிப் வெட்டுக்கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். மனைவியின் தலையை துண்டித்து அதை தனது பைக்கில் வைத்து ஊரெல்லாம் சுற்றி வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த ஹனிபின் மூத்த மகன் ஹிமான் சாப் குல்மி(41) உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு ஹனிபை கைது செய்தனர்.

உறவு வைத்துக் கொள்ளும் விஷயம் தொடர்பாக ஹனிப் தனது மனைவியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தகராறு செய்து வந்துள்ளார். தனது மனைவி உறவு கொள்ள ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தன்னை அவர் சரியாக கவனிக்கவில்லை என்றும் ஹனிப் நினைத்துள்ளார். இந்நிலையில் தான் இந்த தகராறு முற்றி கொலையில் முடிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+