அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!
மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
போபால்: ரூமுக்குள் அனிதாவும், காதலனும் இருந்தபோது, திடீரென கணவன் லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.. பதறிபோய்விட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த படுபாதக செயல் ஒவ்வொன்றாக அரங்கேறியது!
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனை சேர்ந்தவர் லோகேஷ்.. 34 வயதாகிறது.. இவரது மனைவி அனிதா.. அவருக்கு 28 வயதாகிறது.. இருவரும் தசங்கா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், அனிதாவுக்கு ஒரு இளைஞர் மீது காதல் வந்துவிட்டது.. அவர் அதே பகுதியை சேர்ந்தவர் போலும்.. இருவரும் நெருக்கமாக இருப்பது லோகேஷூக்கு தெரிந்து விட்டது.
அனிதா மீது உயிரையே வைத்திருந்த லோகேஷ், இது தெரிந்ததும் அதிர்ச்சியானார்.. பிறகு கள்ள ஜோடி 2 பேரையும் கூப்பிட்டு கண்டித்தார்.. ஆனாலும் அனிதா கேட்கவே இல்லை.. அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர். இப்படித்தான், நேற்றுமுன்தினமும், ரூமில் ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. அந்த நேரம் பார்த்து லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.
இருவரும் இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியும் ஆவேசமுமானார்.. உடனே கீழே கிடந்த கட்டையை எடுத்து 2 பேரையுமே சரமாரியாக தாக்கினார்.. 2 பேருமே அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டனர்.. அதன்பிறகு, கள்ளக்காதலன் சடலத்தை மட்டும் எடுத்து, தன்னுடய பைக்கில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள ஆள் யாருமில்லாத அந்த இடத்துக்கு சடலத்தை கொண்டு சென்றார்.. அங்கு வைத்து, கள்ளக்காதலனின் கண்களை மட்டும் தோண்டி எடுத்துவிட்டு, சடலத்தை வீசிவிட்டார்.
அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்த லோகேஷ், அனிதாவின் சடலத்தை எடுத்து, வீட்டுக்கு வெளியே வாசலில் வீசினார்.. அப்போது ஆத்திரத்தில் கத்தி கூச்சலிட்டார் லோகேஷ்.. அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அனைவருமே ஓடிவந்துவிட்டனர்.. ஊரே திரண்டு வந்துவிட்டதை பார்த்த லோகேஷ், அப்போதுதான் பதறி போனார்.
உடனே அனிதாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. வாயில் இருந்து ரத்தமா வழியுது என்று ஒப்பாரி வைத்தார்.. ஆனால், அந்த பகுதி மக்களுக்கு அனிதா சாவில் மர்மம் இருக்கவும் உடனே போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து அனிதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு லோகேஷிடம் தங்கள் பாணியில் விசாரணையை நடத்தினர்.. அப்போதுதான் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கக்கிவிட்டார் லோகேஷ்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications